வெட்டப்பட்ட மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்க்கும் மாங்காய்கள் - பொதுமக்கள் வியப்பு...!


வெட்டப்பட்ட மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்க்கும் மாங்காய்கள் -  பொதுமக்கள் வியப்பு...!
x
தினத்தந்தி 13 May 2022 6:22 AM GMT (Updated: 13 May 2022 6:22 AM GMT)

உடுமலை அருகே மா மரத்தின் வெட்டப்பட்ட கிளையில் கொத்துக் கொத்தாய் மாங்காய்கள் காய்த்து உள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடுமலை, 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சவுண்டம்மாள். இவர் தனது வீட்டு வளாகத்தில் சிவன் கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்த கோவில் பகுதியில் பத்து ஆண்டுகளான மாமரம் உள்ளது. கோவில் விரிவாக்கத்திற்காக மாமரத்தின் தெற்குப் பகுதிகிளை வெட்டப்பட்டுள்ளது. 

இந்த கிளையில் இதுவரை காய்கள் காய்க்க வில்லை என்பதால் வெட்டியுள்ளனர். தற்போது வெட்டப்பட்டுள்ள அந்தக் கிளை பகுதியிலிருந்து கொத்துக் கொத்தாக மாங்காய் காய்த்து தொங்குகிறது.

 இதை இப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மாங்காய்கள் எப்பொழுதும் கிளையிலிருந்து தான் காய்க்கத் துவங்கும். ஆனால் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து காய்கள் காய்த்து உள்ளது அனைவருக்கும் வியப்பை அளிக்கிறது.




Next Story