விக்ரம் பட பாடல் விவகாரம்: நடிகர் கமல்ஹாசனுக்கு சீமான் ஆதரவு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 May 2022 5:23 AM GMT (Updated: 2022-05-14T10:53:52+05:30)

விக்ரம் படத்தின் பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் கமல்ஹாசனுக்கு ஆதரவினை தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற பாடலில், மத்திய அரசை விமர்சித்து வரிகள் உள்ளதாகவும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், படத்தின் பாடல் வரியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசன் கருத்துகளில் எந்த தவறும் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் கருத்துக்கு தனது ஆதரவினை அளிப்பதாக சீமான் தெரிவித்து உள்ளார்.


Next Story