"5 ஆண்டுகளில் தரவில்லை என்றால் அதிமுகவிற்கு வாக்களிக்க தயார்" - திமுக எம்.பி. ஆ.ராசா

5 ஆண்டுகளில் தரவில்லை என்றால் அதிமுகவிற்கு வாக்களிக்க தயார் என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
சென்னை,
நீட் விவகாரத்தில் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்து கவர்னரை முதல் அமைச்சர் ஸ்டாலின் பணிய வைத்தார் என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார். சென்னையில் திமுக இளைஞரணி சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு, ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆ. ராசா, நீட் விவகாரத்தில் சட்டத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருந்த கவர்னரை தேநீர் விருந்தை புறக்கணித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியவைத்தார். இதுதான் திராவிட மாடலுக்கும் மற்றவைக்கும் உள்ள வித்தியாசம்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்களே ரத்து செய்தார்களா? பெண்களுக்கு உரிமைத் தொகை தருவதாக கூறினார்களே தந்தார்களா? என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டுகிறார்கள். ஐந்து ஆண்டு காலத்தில் தரவில்லை என்றால் அப்போது கூறுங்கள் நானே அதிமுகவிற்கு வாக்களிக்கிறேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story