ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...!


ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 14 May 2022 11:05 AM GMT (Updated: 2022-05-14T16:35:51+05:30)

ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி  பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சதீஷ்குமார், லட்சுமணன் என்ற 2 மகன்களும், சரிதா என்ற மகளும் உள்ளனர். இதில் இளைய மகன் லட்சுமணன் ( வயது 23). அப்பகுதியில் உள்ள கோழி கடையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கடைக்கு வந்த லட்சுமணன் கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தின் ஸ்விட்ச்சை போட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story