மே 20-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


மே 20-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2022 7:27 PM GMT (Updated: 14 May 2022 7:27 PM GMT)

மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

கோடை விடுமுறை மற்றும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதனால் ஆண்டுதோறும் இந்த நாட்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 20-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 20-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வண்ணம் ஜூன் 4-ந் தேதி வேலை நாளாக இயங்கும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.

Next Story