தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 1:42 AM GMT (Updated: 15 May 2022 1:42 AM GMT)

தமிழகத்தின்12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

அசானி புயலுக்கு பிறகு தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 

அதாவது, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.


Next Story