மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 15 May 2022 8:48 AM GMT (Updated: 15 May 2022 8:48 AM GMT)

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் நாளை மறுநாள் வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 15.04.2022 முதல் 17.04.2022 வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story