தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 15 May 2022 1:17 PM GMT (Updated: 2022-05-15T18:47:10+05:30)

தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஊட்டி,

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொற்று மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று தற்போது 100-க்கு கீழாக உள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 10.22 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் ஆகியோர் 50 சதவீதம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 93.51 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகப் பெரிய ஆயுதமாக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story