பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு...!


பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 16 May 2022 5:51 AM GMT (Updated: 2022-05-16T11:21:49+05:30)

ராமநாதபுரம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆர்.எஸ்.மங்கலம், 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த 9 பேர் வேளாங்கண்ணி கோவிலுக்கு நேற்று முன்தினம் வாடகை காரில் சென்றுள்ளனர்.

அவர்கள் அங்கிருந்து இன்று அதிகாலை 2.00 மணி அளவில் நெல்லைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பழனி (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணம் செய்த முத்துலட்சுமி (52), முத்துக்குமாரசாமி (58), ராஜராஜேஸ்வரி (48), பழனி வேலாயுதம் (54), ஆவுடையம்மாள் ஜோதி (54), சண்முகசுந்தரி (57), சங்கரநாராயணன் (58) ஆகிய  7 பேரும் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பாலைக்குடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story