ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய புத்தகம் - முதல்-அமைச்சர் வெளியிட்டார்
ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று அண்மையில் ஓராண்டு நிறைவடைந்தது. திமுகவின் இந்த ஒரு ஆண்டுக்கால ஆட்சியின் போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த பல்வேறு கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட திருக்கோவில் சொத்துக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த புத்தகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஓராண்டு காலத்தில் எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டுள்ளன, எவ்வளவு தங்கம் மீட்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story