முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை
x
தினத்தந்தி 17 May 2022 10:06 PM IST (Updated: 17 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார். தொடர்ந்து அவர் அரசின் சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைத்து தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார்.

கோவை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோவை வருகிறார். தொடர்ந்து அவர் அரசின் சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைத்து தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

கோவை வ.உ.சி. மைதானத்தில் பொருநை அகழ்வு ஆராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி 19- ந் தேதி நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் 18-ந் தேதி இரவு 8.00 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் ரெட்பீல்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவில் ஓய்வு எடுக்கிறார்.

தொடர்ந்து 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் பொருநை அகழ்வு ஆராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் சமீரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 

தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல்

இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு ரெசிடென்சி ஓட்டலில் தொழில் முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடுகிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் ரெட்பீல்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் அங்கிருந்து மாலையில் கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மலர் கண்காட்சி

ஊட்டி செல்லும் மு.க.ஸ்டாலின் 20-ந் தேதி காலை தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். 21-ந் தேதி ஊட்டி 200-ம் ஆண்டு விழா மற்றும் தமிழக அரசின் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார். 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வருகையையொட்டி கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story