போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவா் கைது


போதைப்பொருள் விற்ற ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவா் கைது
x
தினத்தந்தி 17 May 2022 10:33 PM IST (Updated: 17 May 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆபரேசன் விடியல்
புதுவையில்   போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இருந்தபோதிலும் சுற்றுலா நகரமான  இங்கு பல்வேறு   வகையான போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன.
போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை பிடிக்கும் பணியினை ஆபரேசன் விடியல் என்ற பெயரில் போலீசார் செய்து வருகின்றனர். இந்தநிலையில் குருசுகுப்பம் மரவாடி தெருவில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக முத்தியால்பேட்டை   போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆப்பிரிக்க நாட்டினர்
இதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீதர்ரெட்டி, இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்    சிவப் பிரகாசம், அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் ஜஸ்டின் டெல்வின் தாரிமோ (வயது 29) என்ற பெண்ணும், டேபிட் மைக்கேல் எலியா (26), பிரான்சிஸ் லக்கி ஒட்ரி (22) என்பதும் தெரியவந்தது.
கோகைன் பவுடர்
இதில் ஜஸ்டின் டெல்வின் தாரிமோ சுற்றுலா விசாவில் வந்து விழுப்புரம் மாவட்டம் பெரிய முதலியார்சாவடியில் தங்கியுள்ளார். டேவிட் மைக்கேல் எலியா சிதம்பரத்தில் ஒரு கல்லூரியிலும், பிரான்சிஸ் லக்கி ஒட்ரி சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருவதும் தெரியவந்தது.
அவர்களிடம்  சோதனை நடத்தியபோது 11 போதை மாத்திரைகளையும், 21 கிராம் கோகைன் போதை பவுடரையும் வைத்திருப்பது  கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். அவற்றை     இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது.
கூரியர் மூலம்...
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது   செய்து அவர்களிட  மிருந்து   போதைப்பொருட் களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் டெல்லியில் இருப்பவர் ஒருவரிடம்       போதைப் பொருட்களை வாங்கி கூரியர் மூலம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story