குளம் தூர்வாரும் பணிக்கு எதிர்ப்பு
தவளக்குப்பத்தில் குளம் தூர்வாரும் பணிக்கு எதிா்வித்தால் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாததில் ஈடுப்பட்டனா்.
தவளக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தாமரை குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனை அகற்றி, தூர்வாரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சபாநாயகர் செல்வம் ஏற்பாட்டின் பேரில் தொண்டு நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தனிநபர் ஒருவர், தாமரைக்குளம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினார். நேற்று காலை மீண்டும் பொதுமக்கள் ஆதரவுடன் தன்னார்வ அமைப்பு குளம் தூர்வாரும் பணியை தொடங்கியது. இந்த பணியை சபாநாயகர் செல்வம் நேரில் வந்து பார்வையிட்டு விரைந்து முடிக்கவும், தொடர்ந்து குளத்தை பராமரிக்க ஏற்பாடு செய்வதாகவும் பொதுமக் களுக்கு தெரிவித்தார்.
இதற்கிடையில் தனிநபர், தனக்கு சொந்தமான குளம் என கூறி மீண்டும் உறவினர்களுடன் 2-வது நாளாக போலீஸ் நிலையத்தில் முறையிட்டார். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் குளம் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் குளம் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story