30-ந் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் இயக்கம்
வருகிற 30 ந் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர்-நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் வசதிக்காக கூடுதலாக ஒரு முன்பதி இல்லாத விரைவு சிறப்பு ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன்படி திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படும்.
திருச்செந்தூர் - நெல்லை ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு நெல்லையை சென்றடையும். அதே போன்று நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story