குடியாத்தம் கெங்கையம்மன் புஷ்ப பல்லகில் வீதி உலா - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்...!
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா மாநில அளவில் மிகவும் புகழ் பெற்றது.கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி பால் கம்பம் நடும் விழாவும், 30-ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும்,கடந்த 11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும்,14-ஆம் தேதி தேர்த்திருவிழாவும்,15-ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இவ்விழாவின் தொடர்ச்சியாக புஷ்ப பல்லக்கு பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது நேற்று இரவு குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது. மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடியக் காத்திருந்து பல்லக்கை கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story