மேலனூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து...!
மேலனூர் அருகே சாலையோர மண் சரிந்ததில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
திருவள்ளூர்,
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமையன்று 23 டன் எடை கொண்ட நோட்டுப் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
இன்று காலை திருவள்ளூர் அருகே மேலனூர் மூலக்கரை பகுதியில் வந்த லாரியை டிரைவர் ஓரமாக நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
அப்போது சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு பள்ளத்தில் 23 டன் எடை கொண்ட நோட்டுப் புத்தகங்களை ஏற்றி வந்த லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். பின்னர் அதன் உரிமையாளருக்கும் , போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடதுக்கு விரைந்து வந்த போலீசார் லாரியையும், புத்தகங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story