மொடக்குறிச்சி அருகே பெய்த கனமழையால் தரைப்பாலம் மூழ்கியது...!
மொடக்குறிச்சி அருகே பெய்த கனமழையால் அனுமன் நதி தரைப்பாலம் மூழ்கியுள்ளது.
மொடக்குறிச்சி,
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி கோவில்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால் குரங்கன் ஓடை என்ற அனுமன் நதி தரைப்பாலம் மூழ்கியது.
முகாசி அனுமன் பள்ளியில் துவங்கி அவல்பூந்துறை எழுமாத்தூர், பாண்டிபாளையம், கோவில்பாளையம் வழியாக ஊஞ்சலூர் அருகே காவிரியில் கலக்கும் குரங்கன் ஓடை என்ற அனுமன் நதி கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் ஓடையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக ஓடையில் நீர் வரத்து இருந்து வந்தது.
நேற்று இரவு ஆறு மணி துவங்கி 9 மணி வரை விடாமல் மழை பெய்தது. இதனால் குரங்கு ஓடையில் நீர் வரத்து அதிகரித்தது கோவில் பாளையம் என்ற இடத்தில் தரைப்பாலம் நீரில் மூழ்கி முழங்கால் அளவு தண்ணீர் பாலத்திற்கு மேல் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் பாலத்தை கடந்து சென்று வருகின்றனர்.
Related Tags :
Next Story