மேலும் 3 பேருக்கு கொரோனா
புதுவையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 16 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதியானது. இன்று 2 பேர் குணமடைந்தனர். தற்போது ஏனாமில் 9 பேர், காரைக்காலில் ஒருவர், புதுச்சேரியில் 6 பேர் என மொத்தம் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 61 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 473 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 96 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 106 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story