குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் நல்ல பாம்புகள்
பகூரில் குடியிருப்பு பகுதிகளில் நல்ல பம்புகள் படையெடுத்து வருவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பாகூர்
பாகூர் பங்களா வீதியில் நேற்று இரவு ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டினர் அலறியடித்தபடி வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.
இதுபற்றி போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வராததால், பாகூர் பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வாலிபர் விக்னேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு வந்து வீட்டில் புகுந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, ஒரு சாக்கில் போட்டு பாதுகாப்பாக கட்டிவைத்தார்.
இதேபோல் கடுவனூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒரு நல்லபாம்பு மற்றும் ஆராய்ச்சிக்குப்பம் மாரியம்மன் கோவிலில் சாமி சிலைக்கு பின்பு படமெடுத்து ஆடிய பாம்பு ஆகியவற்றையும் விக்னேஷ் பிடித்தார். இந்த பாம்புகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்த போது வனத்துறை தரப்பில் சரியான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது. பாகூர் பகுதியில் படையெடுத்து வரும் பாம்புகளால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story