சிறுமிக்கு பாலியல் தொல்லை


சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 18 May 2022 3:09 PM GMT (Updated: 2022-05-18T20:39:12+05:30)

புதுவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி
புதுவை பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் புதுவை நகர பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்து காவலாளியாக வேலைசெய்து வருகிறார். இவர் தங்கியிருக்கும் வீட்டில் அருகில் பெற்றோருடன் வசிக்கும் 9 வயது சிறுமி அடிக்கடி மணிகண்டன் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம். 
சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த சிறுமிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் பெரியகடை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story