கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 18 May 2022 3:13 PM GMT (Updated: 2022-05-18T20:43:57+05:30)

வில்லியனூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள முத்துப்பிள்ளை பாளையம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முகிலன் (வயது 22), பாண்டியன் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story