ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜோலார்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே பணிமணையில் மழை நீர் புகுந்ததால் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜோலார்பேட்டை,
திரூப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை சந்தை கோடியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11 மணி அளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரி குளங்களில் தண்ணீர் நீர்மட்டம் உயர்ந்தது.
ஏலகிரி ஏரி மற்றும் சந்தைக்கோடியூர் ஏரியும் நிரம்பியது. பலத்த மழை காரணமாக ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து மின் விநியோகம் தடை ஏற்பட்டது. ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள சரக்கு ரெயில் வேகம் பழுது பார்க்கும் பணிமனையில் ரெயில்வே தொழிலாளிகள் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணி செய்யும் பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது மழை நீர் பணிமனையில் புகுந்ததால் தொழிலாளிகளின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு பலத்த கன மழை பெய்ததின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து இரவில் குளிர் காற்று வீசியது. இதனால்அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story