ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 207 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 207 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் ராஜசேகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 58 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 207 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story