மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 209 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 209 மனுக்கள் பெறப்பட்டன
x

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 209 மனுக்கள் பெறப்பட்டன

நாகப்பட்டினம்

நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 209 மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 209 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் நாகை சாமந்தான்பேட்டை பகுதியில் உள்ள அன்னை சத்யா முதியோர் இல்லத்தை சேர்ந்த 3 முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் சாந்தி என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வனுக்கு செயற்கை கால் உள்ளிட்டவைகளை கலெக்டர் வழங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.


Next Story