தீயில் கருகிய 21 எலெக்ட்ரிக் பைக்குகள் - சென்னையில் அதிர்ச்சி


x
தினத்தந்தி 3 May 2023 10:54 PM IST (Updated: 3 May 2023 11:02 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

சென்னை பெரவள்ளூரில் எலெக்ட்ரிக் பைக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஏராளமான எலெக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசமடைந்தன. பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் பிரகாஷ் என்பவர் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார்.

எலெக்ட்ரிக்கல் பைக்கை சார்ஜ் போட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று கரும்புகை வெளியாகி தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த தீ அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற வாகனங்களில் பரவி மளமளவென எரிந்தது. தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஷோ ரூமில் இருந்த 21 எலெக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகி சேதம் அடைந்தன.


Related Tags :
Next Story