லாரி மோதி 21 ஆடுகள் பலி
லாரி மோதி ௨௧ ஆடுகள் பலியானது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு இரவு சுமார் 7 மணி அளவில் தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது தஞ்சையில் இருந்து அரியலூர் நோக்கி அதி வேகமாக வந்த லாரி, சாலையோரத்தில் சென்று கொண்டு இருந்த ஆடுகள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. தொடர்ந்து லாரி டிரைவர் நிற்காமல் லாரியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் 21 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. 2 ஆடுகள் உயிருக்கு போராடும் நிலையில் இருந்து வருகிறது. இதனால் பதறிப்போன சுப்பிரமணியம் கதறி அழுத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.