செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு ரெயிலுக்கு காத்திருந்த 21 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு ரெயிலுக்கு காத்திருந்த பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அந்த இளம்பெண் நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது அறைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை காரில் கடத்திச்சென்றுள்ளனர். அந்த பெண்ணை காரில் கடத்தி சென்ற அந்த கும்பல் செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சாலவாக்கத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு கடத்தி சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த இளம்பெண் அந்த கும்பலிடமிருந்து தப்பி அங்கிருந்த ஒரு வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை மீட்ட அந்த பகுதியினர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி,க்கள் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேவேளை, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இரவு ரெயிலுக்கு காத்திருந்த 21 வயது இளம்பெண்ணை காரில் கடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 4 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரில் ஒருவன் அந்த பெண்ணின் நண்பன் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க... செங்கல்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் திடீர் திருப்பம்: கழட்டிவிட்ட காதலனை சிக்க வைக்க நாடகமாடிய இளம்பெண்...!