தனிமையில் உல்லாசம் அனுபவித்து கழட்டிவிட்ட காதலனை சிக்க வைக்க நாடகமாடிய 21 வயது இளம்பெண்...!


தனிமையில் உல்லாசம் அனுபவித்து கழட்டிவிட்ட காதலனை சிக்க வைக்க நாடகமாடிய 21 வயது இளம்பெண்...!
x
தினத்தந்தி 5 Feb 2023 12:47 PM IST (Updated: 5 Feb 2023 8:09 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு ரெயிலுக்கு காத்திருந்தபோது தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயது இளம்பெண் புகார் அளித்தார்.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது அறைக்கு செல்ல செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் தனது புகாரில், செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயிலுக்கு காத்திருந்த தன்னை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச்சென்று செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் தனது காதலனை சிக்க வைக்க இளம்பெண் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியாக புகார் அளித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான முழு விவரம்:-

காஞ்சிபுரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணியளவில் கிருஷ்ணவேனி என்பவரின் வீட்டின் கதவை தட்டி இளம்பெண் ஒருவர் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து காரில் கடத்தி மாம்பாக்கம் பகுதியில் சாலவாக்கத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியதாகவும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் என்பதும் அவர் சைதாப்பேட்டையில் தனியார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தன்னை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக இளம்பெண் கூறிய நிலையில் செங்கல்பட்டு நகரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், அந்த இளம்பெண் இளைஞர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த இளம்பெண் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அந்த இளம்பெண்ணுக்கும் உத்திரமேரூரை அடுத்த மலையான்குளத்தை சேர்ந்த சலீம் என்கிற பிரகாஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அதோபோல் நேற்றும் இருவரும் தனிமையில் சந்திக்க மாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த இளம்பெண் தனது காதலனான சலீம் என்றகிற பிரகாஷிடம் கேட்டுள்ளார். திருமணம் செய்துகொள்ள காதலன் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காதலனான சலீம் தனது காதலியான இளம்பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால், தன்னுடன் தனிமையில் இருந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த தனது காதலன் சலீமை சிக்கவைக்க திட்டம் தீட்டிய அந்த இளம்பெண், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதனை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக நாடகமாடிய அந்த பெண்ணிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் காதலனான சலீம் என்கிற பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலனை சிக்க வைக்க தன்னை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக நாடகமாடிய இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story