குறைதீர்க்கும் கூட்டத்தில் 213 மனுக்கள் பெறப்பட்டன


குறைதீர்க்கும் கூட்டத்தில்  213 மனுக்கள் பெறப்பட்டன
x

குறைதீர்க்கும் கூட்டத்தில் 213 மனுக்கள் பெறப்பட்டன

திருவாரூர்

திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 213 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 213 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டார்.

செயல்முறை ஆணைகள்

அதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.7.06 லட்சம் மானியத்திற்கான செயல்முறை ஆணைகளையும், மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் வலங்கைமான் வட்டாரத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த 2 பேருக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதற்கான பணி ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

மன்னார்குடி தாலுகா மற்றும் நகராட்சி, சுற்று வட்டார 457 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய மன்னார்குடி பகுதியினை சேர்ந்த நவீன் மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்ட புதியதோர் கிளவி என்ற மொபைல் பயன்பாட்டினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பாலசந்திரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) லதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story