ஜமாபந்தியில் 214 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறையில் நடந்த ஜமாபந்தியில் 214 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறையில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி உதவி கலெக்டர் யுரேகா தலைமையில் நடந்தது. கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. நேற்று நடந்த ஜமாபந்தியில் 214 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 130 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 75 மனுக்கள் நிலுவையில் உள்ளன. மேலும் தகுதி இல்லாத 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக உதவி கலெக்டர் யுரேகா தெரிவித்தார். இதில் ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 920 மதிப்புள்ள 12 இலவச வீட்டு மனை பட்டா, ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தார்ப்பாய் மற்றும் தெளிப்பான், 16 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை உதவி கலெக்டர் யுரேகா வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் மகேந்திரன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சபிதா தேவி, மண்டல துணை தாசில்தார் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.