சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 2,140 பேர் எழுதுகின்றனர்
சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 2,140 பேர் எழுதுகின்றனர்
சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை 2,140 பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சாலை ஆய்வாளர் பணிக்கு 825 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்பட 15 நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. எழுத்துத்தேர்வு முதல் தாள் மற்றும் 2-ம் தாள் என்று 2 நிலைகளில் நடக்கிறது. முதல் தாள் தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், 2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத 2,140 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, சாந்தி நிகேதன் மெட்ரிக்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் மெட்ரிக்பள்ளி, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளி, சினேகதீபம் மெட்ரிக்உள்ளி ஆகிய 8 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.