217 மதுபாட்டில்கள் பறிமுதல்


217 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

வீட்டில் பதுக்கிய 217 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அறிவுரையின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் தலைமையில் போலீசார் ஆறுமுகநேரியில் சுரேஷ் (வயது 49) என்பவர் வீட்டில் ேசாதனையிட்டனர். அங்கு 217 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்த மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுரேஷ் மற்றும் வடக்கு சுப்பிரமணியபுரம் வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story