தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,176 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,176 வழக்குகளுக்கு தீர்வு
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,176 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2¼ ேகாடி வசூல் செய்யப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
திருவாருர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமையில் நடந்தது.
அமர்வு நீதிபதி (பொறுப்பு) சங்கர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலமுருகன், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரெகுபதி ராஜா, குற்றவியல் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார். வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
2,176 வழக்குகளுக்கு தீர்வு
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 280 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2 ஆயிரத்து 176 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 752 வசூல் செய்யப்பட்டது.