பணம் வைத்து சூதாடிய 22 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 22 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அரியலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூரில் இருந்து இல்லக்குடி செல்லும் சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது கருப்புசாமி கோவில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிற்பனை கண்டனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்றபோது, பல வாலிபர்கள் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் அவர்கள் அரியலூர், ஜெமீன் ஆத்தூர், கயர்லாபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.95 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 13 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story