தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை
மாணவிைய பலாத்காரம் செய்த பழனியை சேர்ந்த தொழிலாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீ்ர்ப்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்
பழனி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). தொழிலாளி. இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட வெங்கடாசலத்துக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், 506 பிரிவின் கீழ் (மிரட்டல்) 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story