மக்கள் நீதிமன்றத்தில் 2,207 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 2,207 வழக்குகளுக்கு தீர்வு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,207 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜமுனா தலைமை தாங்கினார். போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.

இதில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள் என பல்வேறு பிரிவுகளை சார்ந்த வழக்குகள் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதில், வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. மாவட்ட முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 6,070 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 2,207 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.13 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 678 இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் கோட்டீஸ்வரன் செய்திருந்தார்.


Next Story