பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பட்டன
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பட்டன
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்பஅட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 225 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லும் மாணவ, மாணவிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி, தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொறுப்பு) அழகர்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.