லாரியில் கடத்திய 23 கிலோ கஞ்சா சிக்கியது


லாரியில் கடத்திய 23 கிலோ கஞ்சா சிக்கியது
x

லாரியில் கடத்தி வந்த 23 கிலோ கஞ்சா காட்பாடியில் சிக்கியது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

காட்பாடி

லாரியில் கடத்தி வந்த 23 கிலோ கஞ்சா காட்பாடியில் சிக்கியது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

லாரியில் கஞ்சா கடத்தல்

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் இன்று காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பேக்குகள் இருந்தன. ஆனால் உள்ளே சோதனை செய்த போது எதுவும் சிக்கவில்லை.

டிரைவர் சீட்டுக்கு அடியில் ட்ராலி பேக் ஒன்று இருந்தது. அதை சோதனை செய்த போது அதில் 23 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த கார்த்தி (வயது28), திருச்செந்தூர் நாசரேத்தை சேர்ந்த கல்லண்டகுமார் (33) ஆகியோர் என்றும் இவர்கள் லாரி டிரைவர்கள் எனவும் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு செல்வதும் தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நாங்கள் கஞ்சாவை கடத்தி வந்து விடுவோம். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்து வாங்கி செல்வார்கள் என கூறினர்.

அவர்களை போலீசார் வரவழைக்க கூறினார்கள். அதேபோல் அவர்கள் கூறி 3 பேர் காரில் வந்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் தொப்பன் பண்ணையைச் சேர்ந்த மாடசாமி (25) வரதராஜபுரத்தை சேர்ந்த பிரேம் (24), சிவராமமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பது தெரியவந்தது.

5 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்கள் 2 பேர் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய லாரி, கார், கடத்தி வந்த 23 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story