தூத்துக்குடியில்பூ வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை


தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்பூ வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பூ வியாபாரி வீட்டில் 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூ வியாபாரி

தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 55). பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனது பூக்கடைக்கு சென்று விட்டாராம். இரவில் மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

விசாரணை

இது குறித்து சித்திரைவேல் மத்தியபாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story