தேனியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 23 பேர் கைது


தேனியில் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளர்கள் 23 பேர் கைது
x

தேனியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளா்கள் 23 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

தேனியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரச்சினைகள் செய்யும் நோக்கத்தோடு கடமலைக்குண்டு பகுதியில் ஒரு தோட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூடியுள்ளதாகவும், அவர்கள் அங்கிருந்து தேனிக்கு செல்ல இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த தோட்டத்தில் கடமலைக்குண்டு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 23 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story