இந்து முன்னணியினர் 24 பேர் கைது
இந்து முன்னணியினர் 24 பேர் கைது
திருவாரூர்
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணியினர் மாவட்ட செயலாளர் நாடிமுத்து தலைமையிலும், மாவட்ட தலைவர் ரமேஷ், பொறுப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 24 பேரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story