மதுரையில் 24 மணி நேரமும் காபி-டீக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்-சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தல்


மதுரையில்  24 மணி நேரமும் காபி-டீக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்-சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தல்
x

24 மணி நேரமும் காபி- டீக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மதுரையில் நடந்த காபி - டீ வர்த்தகர் சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை


24 மணி நேரமும் காபி- டீக்கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மதுரையில் நடந்த காபி - டீ வர்த்தகர் சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

காபி- டீ வர்த்தகர் சங்கம்

மதுரை காபி-டீ வர்த்தகர் சங்கத்தின் 35-வது ஆண்டு விழா தெப்பக்குளம் பகுதியில் உள்ள சந்திர குழந்தை திருமண மகாலில் நேற்று நடந்தது. சங்க பொருளாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். சங்க தலைவர் முத்து மாணிக்கம் விழாவை தொடங்கி வைத்தார். சங்க செயலாளர் மீனாட்சி சுந்தரேஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சங்கர், கவுரவ செயலாளர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் பாலசந்திரன் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ. பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

தீர்மானங்கள்

உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் ஆகியவற்றை 4 சித்திரை வீதி, மாசி வீதி, வெளி வீதிகளில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். காபி- டீக்கடைகளில் உபயோகிக்கும் கமர்சியல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்கு அளிக்க வேண்டும்.

காபி-டீ தொழிலுக்கு ``டி-அன்-ஓ'' லைசென்ஸ் முழுமையாக ரத்து செய்து தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காபி-டீ தொழிலை, குடிசை தொழிலாக அங்கீகாரம் செய்து, மின்சார கட்டணத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். நலிந்த நிலையில் உள்ள காபி-டீ க்கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா மற்றும் பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு மானியம் வழங்க வேண்டும். 60 வயதை கடந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24 மணி நேர அனுமதி

மதுரை தூங்காநகரில் 24 மணி நேரமும் காபி- டீக்கடைகள் செயல்பட காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி வழங்க வேண்டும். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி சோலைராஜ் நன்றி கூறினார்.


Next Story