வேலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 2,400 விண்ணப்பங்கள் குவிந்தது
வேலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 2,400 விண்ணப்பங்கள் குவிந்தது.
வேலூர்
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடைசி நாளாக ஏராளமான ஆசிரியர்கள் அங்கு வந்து அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த காலி பணியிட பள்ளி விவர பட்டியலை பார்ர்த்து அங்கேயே அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் அளித்தனர். 3 நாட்களில் 2,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story