4 லாரிகளுக்கு ரூ.2.48 லட்சம் அபராதம்


4 லாரிகளுக்கு ரூ.2.48 லட்சம் அபராதம்
x

அதிக பாரம் ஏற்றிய 4 லாரிகளுக்கு ரூ.2.48 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வெளி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த 4 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த 4 லாரிகளுக்கும் மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story