குமரி மாவட்டத்துக்கு24-ந் தேதி உள்ளூர் விடுமுறை
குமரி மாவட்டத்துக்கு24-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் 24-ந் தேதி அனைத்து மாநில அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.
அன்றைய உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 11-2-2023 அன்று வேலை நாளாக இருக்கும். அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story