25 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


25 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

சிவகாசி அருகே 25 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்


சிவகாசி அருகே 25 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று திருத்தங்கல் அருகே செங்கமலப்பட்டி பெரியார் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த ஒரு வேனில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வேனில் தலா 35 கிலோ கொண்ட 25 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அவற்றை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அரிசி உரிமையாளர் கோவில்பட்டி புதுத்தெருவை சேர்ந்த கார்த்தி (வயது 23), வேன் டிரைவர் கோவில்பட்டி பூமியம்மாள்காலனியை சேர்ந்த சுந்தர் (21) கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து அரிசி உரிமையாளர் கார்த்திக், வேன் டிரைவர் சுந்தர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொழிலாளியான மாரிமுத்துவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story