காரில் கடத்தப்பட்ட 25 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்தப்பட்ட 25 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

சங்கரன்கோவில் அருகே காரில் கடத்தப்பட்ட 25 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் வாடிகோட்டை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்த 2 பேர் கீழே குதித்து தப்பி ஓடினர். அவர்களை பிடிக்க போலீசார் சென்றபோது, காரில் இருந்த மற்ற 2 பேர் காரை பள்ளத்தில் தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் வந்து பள்ளத்தில் கிடந்த காரை டிராக்டர் மூலம் வெளியே தூக்கினர். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட 25 மூட்டை ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story