போலீசாரின் ரோந்து பணிக்காக 25 மோட்டார் சைக்கிள்கள்


போலீசாரின் ரோந்து பணிக்காக 25 மோட்டார் சைக்கிள்கள்
x

போலீசாரின் ரோந்து பணிக்காக 25 மோட்டார் சைக்கிள்களை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

போலீசாரின் ரோந்து பணிக்காக 25 மோட்டார் சைக்கிள்களை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வருகிற 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சாமி தரிசனம் செய்ய வரும் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக முதற்கட்டமாக 25 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ''முதற்கட்டமாக 25 ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் கூடுதலாக ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் கிரிவலம் சென்று வர அவர்கள் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்'' என்றனர்.


Next Story