25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாகை பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 25 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.
நாகை பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 25 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.
வாகன சோதனை
நாகை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வழிகாட்டுதலின் படியும், நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நாகை எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் கல்லூரி முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடைபெற்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், நாகை போக்குவரத்துப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் ஜார்ஜ், சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இதில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாமலும்,, செல்போனில் பேசிக் கொண்டும் சென்றவர்கள், வாகனத்தில் ஆவணங்கள் இன்றி சென்றவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதால் 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
இந்த வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.