பள்ளி சீருடை உற்பத்திக்கு 25 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்;விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்


பள்ளி சீருடை உற்பத்திக்கு 25 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும்;விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
x

பள்ளி சீருடை உற்பத்திக்கு 25 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஈரோடு

பள்ளி சீருடை உற்பத்திக்கு 25 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளி சீருடை

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு 4 இணை பள்ளி சீருடைகள் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் 10.23 கோடி மீட்டர் பேண்ட், சட்டை, சுடிதாருக்கான துணிகள் உற்பத்தி செய்து, ஆடையாக தைத்து வழங்க அறிவிப்பு வெளியிட்டனர்.

அதில் முதல் கட்டமாக 5.43 கோடி மீட்டர் சீருடை துணிகள், கைத்தறி, பெடல் தறி, விசைத்தறி மற்றும் தானியங்கி தறி, அரசு துணி நூல் அலகிலும் உற்பத்திக்கு வழங்கி உள்ளனர். இதில் டிரில் துணிகள் ஆட்டோ லூமில் 97.93 லட்சம் மீட்டரும், கேஸ்மென்ட் ரக துணிகள் விசைத்தறியில் 73.13 லட்சம் மீட்டரும், பிற ரகங்களிலும் அதிகபட்சமாக ஆட்டோ லூமிலும் ஆர்டர் வழங்குகின்றனர். இதனால், விசைத்தறியாளர்கள், விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூலி உயர்வு

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, 'இலவச பள்ளி சீருடைகள் ஆட்டோ லூம் மூலம் உற்பத்தி செய்வதால், விசைத்தறியாளர்கள் பாதிக்கின்றனர். இதுதொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம், கோரிக்கை வைத்தோம். பள்ளி சீருடைக்கான துணிகள் உற்பத்தியை, தமிழக விசைத்தறியாளர்களிடமே வழங்க வேண்டும் என கேட்டு கொண்டோம்.

அவ்வாறு வழங்குவதாக உறுதியளித்தனர். அதன்படி கூடுதலாக ஒதுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி சீருடைக்கான உற்பத்தி கூலி உயர்த்தவில்லை. தற்போது ஊதியம், குடோன் வாடகை, மின் கட்டணம் உயர்வு, தொழில் சார்ந்த மறைமுக செலவுகள் அதிகரித்துள்ளது. எனவே கூலியை 25 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story